
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி
பதிலளித்துள்ளார்.
நிபந்தனைகள் இன்றி வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், பொது
வெளியில் விவாதிக்க தயாரா என்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வருக்கு
கடிதம் எழுதி உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் நாராயணசாமி,
புதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம் என்றார்.
ஆளுநரின் ஆலோசகர் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கூறியிருந்தேன் என்றும்
கூறினார்.
நிபந்தனைகளை ஏற்க முடியாது... பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா...
கிரண்பேடி பதிலடி
பேச்சுவார்த்தைக்கான இடம், நேரம், பங்கேற்பவர்கள் குறித்து கூற கிரண்பேடியை
போலவே, எங்களுக்கும் உரிமை உள்ளது என்று கூறிய புதுச்சேரி முதல்வர்
நாராயணசாமி, நாங்கள் அறவழியில் போராடி வருகிறோம், ஆளுநர் மாளிகையை
முற்றுகையிடவில்லை என்று விளக்கமளித்தார்.
கிரண்பேடி எழுதிய கடிதத்தில் ஆணவம் தான் தெரிகிறது என்றும், பிரச்னைக்கு
தீர்வு காணும் எண்ணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை எனவும்
தெரிவித்தார்.
மேலும், ஆளுநரின் ஆலோசகர் நியமனத்துக்கு எதிராக உள்துறைக்கு ஏற்கனவே கடிதம்
எழுதி உள்ளேன்; ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டு உள்ளதாக கிரண்பேடி
பொய்யான தகவலை பரப்புவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment