லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாதது அதிமுக எம்.பி மைத்ரேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
லோக் சபா தேர்தல் பணி குழுவில் அதிமுக சார்பில் பொறுப்பு எதுவும்
வழங்கப்படாதது அதிமுக எம்.பி மைத்ரேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
லோக்
சபா தேர்தலில் வெவ்வேறு பணிகளை செய்வதற்காக மூன்று புதிய குழுக்களை அதிமுக
கட்சி உருவாக்கி இருக்கிறது. லோக் சபா தேர்தலுக்காக மூன்று குழுக்களை
அதிமுக உருவாக்கி உள்ளது.
கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பி.
தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெ.சி.டி பிரபாகர், சி. பொன்னையன், நத்தம்
விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செ. செம்மலை, ரவி பெர்னார்ட்,
பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி தம்பிதுரை உள்ளிட்ட பலருக்கு இதில்
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் இந்த குழுவில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அதிமுக
எம்.பி மைத்ரேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த அறிக்கை
வெளியாகி உள்ளது.
அப்போது
கழகத்தில்
நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப்
பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள்
அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப்
பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்.
தேர்தல் அறிக்கை
2009
ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை
இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 2009 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே
வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப்
பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி " வளமான இந்தியாவிற்கான
செயல் திட்டம் - An Agenda For A Better India " என்ற தலைப்பில் அந்த
தேர்தல் அறிக்கை தயாரானது.
அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார்.
அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கை விளக்கம்
தேர்தல்
அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக
விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் திரு.சுனில் செய்யலாம்
என்று அம்மா அவர்களிடம் கூறியபோது, " இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான்
சரியாக இருக்கும் "என்று உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு
முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல்
அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு
அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point
presentation செய்தது அதுதான் முதல் தடவை.
அப்போதே பாராட்டு
அடுத்த
நாள் காலை அம்மா அவர்கள் கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான
நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று அவர்களுக்கு வணக்கம்
தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு அம்மா அவர்களும் ஏற்றுக்கொண்ட
பிறகு அம்மாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு
அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார். "
மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் " என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி
சென்றார்கள். இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்.,
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment