அதிராம்பட்டினம், நவ.13
நன்றி : அதிரை நியூஸ்
அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை
கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட
அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் பல முறை மனுக்கள் அளித்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், இன்று (நவ.14) புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன் உட்பட அதிரை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment