மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை
சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு
இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அரசிடம் போதுமான நிதி
கையிருப்பு உள்ளதாக கூறிய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பொருத்தமான
பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே
தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு
பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு
நிதி தேவைப்படவில்லை என்றால், அரசின் பதவிக்காலம் இன்னும் 4 மாதமே
இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி மீது அழுத்தத்தை கொடுப்பது ஏன்? என அவர்
வினவினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில்
மேலும் அவர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 4½ ஆண்டுகளை கடந்து
விட்டது. அதற்கு மேலும் 4 மாதங்கள் மட்டுமே உண்மையான பதவிக்காலம் உள்ளது.
அப்படியிருக்க ரிசர்வ் வங்கியின் மூலதன கட்டமைப்பை வரையறுப்பதில் தற்போது
அவசரம் காட்டுவதேன்? இந்த விவகாரத்தில் 4½ ஆண்டுகள் அமைதியாக இருந்தது
ஏன்?’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.
No comments:
Post a Comment