Latest News

ஜெயலலிதாவின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா

ஜெயலலிதாவின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசியலில் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கிய அவர், தமிழக அரசியலிலும் யாரும் அசைத்து பார்க்க முடியாத பெரும் தலைவராக விளங்கினார். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.மேலும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் ஜெயலலிதாவை சாரும். ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்து வைத்தனர்.

ஆனால் திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா போன்றே இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலாக வேறு சிலை வைக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி இன்று புதிதாக ஜெயலலிதா சிலை உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே உள்ள எம்ஜிஆர் சிலை பக்கத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெயலலிதாவின் சிலையை பழைய துணி போட்டு மூடியது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்பு அவரசகதியில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்கு மாற்றாக இன்று புதிய சிலையை திறந்த நிகழ்வில் ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில் அச்சிலையை பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.