அரிசோனா
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் ஒரு சிறுவன் அரையை சுத்தம் செய்யச் சொன்ன பாட்டியை கொன்ரு தானும் தற்கொலை செய்துக் கொண்டான்
அமெரிக்க
நாட்டில் உள்ள அரிசோனா மாகாணட்டின் விட்ஸ்ஃபீல்ட் பார்க் பகுதியில் யுவோன்
உட்வர்ட் என்னும் மூதாட்டியும் அவர் கணவரும் தங்கள் 11 வயதுப் பேரனுடன்
வசித்து வந்தனர். அந்த சிறுவனை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு
அடிக்கடி இருவரும் கூறுவதால் அவன் இருவர் மீதும் கோபத்தில் இருந்தான்.
சம்பவத்தன்று
மாலை 5 மணிக்கு அந்த சிறுவனை அறையை உடனடியாக சுத்தம் செய்யச் சொல்லி
சத்தம் இட்ட பாட்டி டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தாவும் உடன் அமர்ந்திருந்தார். அப்போது அந்த சிறுவன்
தாத்தாவின் துப்பாக்கியை எடுத்து வந்து பாட்டியின் பின் தலையில்
துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான்.
தாத்தா பேரனை பிடிக்க
துரத்தி உள்ளார். அவரால் பிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர் அவசர தொலைபேசி
எண்ணுக்கு போன் செய்தார். அப்போது ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம்
கேட்டுள்ளது. ஓடிச் சென்ற தாத்தா அந்தப் பேரன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை
செய்துக் கொண்டதை பார்த்து அதிர்ந்துள்ளார்.
காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment