
மூன்று மாநில தேர்தல்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வெற்றி பெறும் என புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மத்தியப்
பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய
மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்,
முதல்கட்டமாக மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு
தேர்தல் நடைபெறும்.
மிசோரம், தெலுங்கானா மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல்
நடைபெறும். 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி
எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
சமீபத்தில்
வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் மத்தியப்
பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி
காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தன. ஏபிபி நியூஸ்
மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத்
தகவல் வெளியானது.
இந்நிலையில்,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ள 65 சட்டசபை,
520 மக்களவை தொகுதிகளில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்
கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் மற்றும் வார்ரூம்
ஸ்ட்ராடெஜிஸ் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த மூன்று
மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 65 மக்களவை
தொகுதியில் பாஜக 43, காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய
வந்துள்ளது. 2013 பாஜக 62, காங்கிரஸ் 3 மக்களவை தொகுதிகளில் வென்றிருந்தது.
அதேபோல், ஏபிபி-சிவோட்டர்ஸ், போல் ஆஃப் போல்ஸ் மேற்கொண்ட தேர்தலுக்கு
முந்தையை கருத்துக் கணிப்புகளும் இன்று வெளியாகியுள்ளன.
- மத்திய பிரதேசம்:-(மொத்தம் - 230 தொகுதிகள்)
மத்திய
பிரதேசத்தில் பாஜக 142 இடங்களில் வெற்றி பெறும் என இந்தக் கருத்துக்
கணிப்பு கூறுகின்றது. இது 2013ம் ஆண்டு தேர்தல் வெற்றி பெற்ற இடங்களைவிட 23
குறைவு. அதேபோல், காங்கிரஸ் கட்சி 77 இங்களில் வெல்லும். இது கடந்த
தேர்தலை விட 20 அதிகம். மற்ற கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெறும்.
வாக்கு வங்கி சதவீதம்
பாஜக - 44 சதவீதம் (44.87 - 2013)
காங்கிரஸ் - 35 சதவீதம் (36.37 - 2013)
காங்கிரஸ் - 35 சதவீதம் (36.37 - 2013)
பாஜக:
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 142
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 108
போல் ஆஃப் போல்ஸ் - 125
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 108
போல் ஆஃப் போல்ஸ் - 125
காங்கிரஸ்:
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 77
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 122
போல் ஆஃப் போல்ஸ் - 100
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 122
போல் ஆஃப் போல்ஸ் - 100
மற்றவை :
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 11
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 0
போல் ஆஃப் போல்ஸ் - 5
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 0
போல் ஆஃப் போல்ஸ் - 5
- சட்டீஸ்கர் (மொத்தம் 90 தொகுதிகள்)
வாக்குவங்கி சதவீதம்:
பாஜக - 43 (42.3 - 2013)
காங்கிரஸ் - 39 (41.6 - 2013)
காங்கிரஸ் - 39 (41.6 - 2013)
பாஜக:
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 47
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 40
போல் ஆஃப் போல்ஸ் - 43
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 40
போல் ஆஃப் போல்ஸ் - 43
காங்கிரஸ்:
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 33
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 47
போல் ஆஃப் போல்ஸ் - 40
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 47
போல் ஆஃப் போல்ஸ் - 40
பகுஜன் சமாஜ் கூட்டணி:
வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 10
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 3
போல் ஆஃப் போல்ஸ் - 7
ஏபிபி-சிவோட்டர்ஸ் - 3
போல் ஆஃப் போல்ஸ் - 7
- ராஜஸ்தான் ( மொத்தம் 200 தொகுதிகள்)
டைம்ஸ்
நவ், வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவை வீழ்த்தி
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவு வெளியாகியுள்ளது.
பாஜக - 75 (163 - 2013)
காங்கிரஸ் - 115 (21 - 2013)
மற்றவை - 10 (16- 2013)
காங்கிரஸ் - 115 (21 - 2013)
மற்றவை - 10 (16- 2013)
No comments:
Post a Comment