ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள்
இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால்
முடிகிறது.
இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாக
சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகிறது.

நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனை புற தேவைகளுக்கான ஒன்றாக
மட்டும் மாற்றி இருக்கிறது. நம் நாட்டுப் பண்பாடு நீரை மையமாகக்கொண்டது.
ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகம் நம்முடையது. பல வீடுகளில் பெண்கள் அதிக
நேரம் செலவிடுவது நீர் சேகரிப்புக்கும், உணவு சமைப்பதற்கும்தான்.
சமைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒரு தம்ளர் அரிசியை வேக வைக்க இரண்டு பங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அரிசியை சமைக்கும் முன்னர் களைந்து சுத்தம் செய்வதற்கு, வேக வைப்பதற்கு தேவைப்படுவதைவிட அதிக தண்ணீர் தேவை. நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலை கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. சுற்றுச்சூழல் காரணங்களால் நீர்த்தட்டுப்பாடு நிலவுகிறது என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தண்ணீருக்காக உலக யுத்தம் வரும் என்று எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் உள்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை நிறைவு செய்யாத ஆட்சியாளர்கள், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்குச் சொற்ப கட்டணத்தில் நீர் ஆதாரங்களை பயன்படுத்தும் உரிமங்களை வாரி வழங்குகிறார்கள். உழவு தொழில் அடிப்படையில் அமைந்த இந்திய சமூகம் இன்னும் தன்னிறைவு பெறாமலேயே வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. தண்ணீர் பொதுச் சொத்து என்ற அடிப்படை உரிமை காற்றில் போய்விட்டது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கை அடியொற்றி வாழ்ந்து வந்தது நம்முடைய உழவுச் சமூகம். ஆனால் இன்றைக்கு தொழிற்சமூகமாக மாறிவரும் நிலையில், மக்களின் நீர்த்தேவை குறித்து அரசுக்கு கவனம் அதிகம் தேவை.

No comments:
Post a Comment