
சட்டீஸ்கர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராம் தயால் அக்கட்சியில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
சட்டீஸ்கர் காங்கிரஸ் மூத்த
தலைவராக இருந்தவர் ராம் தயால். இவர் கடந்த தேர்தலில் பலி தனாக்கூர்
தொகுதியில் 28 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். ஆதிவாசிகளின்
செல்வாக்கு பெற்று இருந்த அவர், மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டு
இருந்தார்.
இந்தநிலையில்,
இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அமித்ஷா, ராமன் சிங்
முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து
ராம் தயால் விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்று அரசியல்
நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment