
டிட்லி புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய
வங்ககடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் தீவிர புயலாக வலுப்பெற்று
நாளை ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும்
இடையே 370 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை மைய இயக்குனர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே மீனவர்கள் நாளை வரை மத்திய மேற்கு வங்க கடல்
பகுதிக்கும், வரும் 14ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்
என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டிட்லி புயல் கரையை நாளை கடக்கவுள்ள
நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
இருப்பதாக வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒடிசாவின்
புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஏராளமான தேசிய பேரிடர்
மீட்புப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாழ்வான
பகுதியிலிருந்து, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு
வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment