டெல்லி: அமலாக்கத் துறை இயக்குனராக சஞ்சய் மிஸ்ரா நியமனம்
செய்யப்பட்டுள்ளார். ஐஆர்எஸ் அதிகாரியான மிஸ்ராவின் இந்த நியமனத்தை அரசு
உறுதி செய்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு கூடுதலாக அவர் இந்த
பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் முதன்மை
சிறப்பு இயக்குனராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டரை
ஆண்டுகள் அமலாக்கத் துறை இயக்குனராக இருந்த கர்னல் சிங்கின் பதவிகாலம்
இன்றோடு முடிவடைந்ததையொட்டி அந்த பொறுப்புக்கு சஞ்சய்மிஸ்ரா நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
1984 ஐபிஎஸ்
பிரிவை சேர்ந்த மிஸ்ரா டெல்லியில் வருமான வரித்துறை ஆணையராக இருந்துள்ளார்.
என்டிடிவிக்கு எதிரான புகார் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில்
இவரது வழிகாட்டுதல்கள் இருந்ததாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அகமதாபாத்திலும் சஞ்சய் மிஸ்ரா பணியாற்றியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம், அமலாக்கத்துறையில் இவர் சிறப்பான பணிகளை
செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மிஸ்ரா
இதுவரை மத்திய அரசின் உயரிய பொறுப்பை வகித்ததில்லை எனவே அமலாக்கத்துறையின்
கூடுதல் பொறுப்பாக இந்த உயரிய பதவி அளிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி
நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விரைவில் தனி பொறுப்புடன் மிஸ்ரா
அமலாக்கத்துறையை வழி நடத்துவார் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. கர்னல்
சிங்கின் பதவி காலத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்யும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருவாரமாக சிபிஐயில் உயரிய அதிகாரிகள்
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அதற்கான வாய்ப்புகள்
குறைந்தது.
கர்னல் தாமாக முன்வந்து பணி ஓய்வு ஏற்க முடிவு
செய்திருந்தார். 2016 முதல் அவருடைய பதவி காலத்தில் மூன்று முறை பணி
நீட்டிப்பு பெற்றுள்ளார். அக்டோபர் 2016 முதல் இயக்குநர் பொறுப்பில் மூன்று
முறை மூன்று மாதங்கள் என கூடுதல் பொறுப்பை கர்னல் சிங் வகித்துள்ளார்.
அமலாக்கத் துறையின் இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங்குக்கு எதிராக உச்ச
நீதிமன்றத்தில் அரசு குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தது. அதில்
ராஜேஷ்வர் சிங்கிற்கு ஐஎஸ்ஐ ஏஜென்டிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக
குறிப்பிடப்பட்டிருந்தது. பணி ஓய்வு பெற்ற அமலாக்கத் துறை இயக்குனர் கர்னல்
சிங்கும், ராஜேஷ்வர் சிங்கும் நெருக்கமானவர்கள். ராஜேஸ்வர் சிங்கிற்கு
எதிராக அரசு கூறிய குற்றச்சாட்டை மறுத்து தமது நண்பருக்கு ஆதரவாக கர்னல்
சிங் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment