புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்
கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல் காந்தி, வருகிற 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்
எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட உங்களது
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என கூறினார். இந்த கூட்டம் 30
நிமிடங்கள் வரை நீடித்தது.
அதன்பின் அவர் ரபேல் போர் விமானங்கள் விவகாரம் பற்றி பேசும்பொழுது,
ரூ.30 ஆயிரம் கோடியை தொழிலதிபர் அனில் அம்பானியிடம் பிரதமர் நரேந்திர மோடி
ஒப்படைத்து உள்ளார். ஆனால் ராணுவ வீரர்களின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்
பற்றிய கோரிக்கைகளை கேட்க அவர் மறுக்கிறார் என கூறினார்.
ரபேல்
போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனம் லாபம்
அடைந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தது. ஆனால்
இதனை அந்நிறுவனம் மறுத்திருந்தது.
No comments:
Post a Comment