சர்கார்' டைட்டில் வைத்த உங்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு
ஆர்வம் இருக்கின்றது என்றால் 19 மாநிலங்களிலும் மத்திய அரசிலும் சர்காராக
இருக்கும் எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
செளந்திரராஜன் கூறியுள்ளார்.
'சர்கார்' படத்தின் ஆடியோ விழாவில்
நடிகர் விஜய் அரசியல் பேசியபோது, 'சர்கார் படம் குறித்தும் விஜய்
குறித்தும் பேசி, அந்த படத்தை ஓட வைக்க நான் விரும்பவில்லை என்று கூறியவர்
தமிழிசை செளந்திரராஜன் அவர்கள்.
ஆனால் இன்று செய்தியாளர்களிடம்
பேசியபோது, 'சர்கார் என படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது
செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால், சர்காராக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு
ஆர்வம் இருக்கும் என்று பேசி 'சர்கார்' படத்திற்கு அவருக்கே தெரியாமல்
புரமோஷன் செய்துள்ளார்.
மேலும் அதே பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியபோது, 'கமல் ஒரு மாய
உலகில், மனக்கணக்கில் இருக்கின்றார். அரசியலை சினிமா என்று நினைத்து
கொள்கிறார். அவர் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்து கல்லாவை
நிரப்பிவிட்டு இப்போது அரசியல் பேசுவதை சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது
என்று கூறியுள்ளார்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment