கோவா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றபோதும் ஆட்சி
அமைக்க முடியாமல் போனது. மாநில முதல்–மந்திரியான மனோகர் பாரிக்கர் உடல்நலம்
குறைவு காரணமாக நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதனால் புதிய முதல்–மந்திரியை நியமிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சிகள்
பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி மாநில ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி
வருகிறது. அதே சமயம் பா.ஜ.க.வும் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கான
நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இருவரும் இன்று திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் அவர்கள் விலகினர்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அவரது முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்தனர்.

No comments:
Post a Comment