
சென்னை:
புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு
தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவுடன் தமிழகத்தில்
பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்வோம் என்று
நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இனி வீடுதோறும்
கட்சி தொடங்கும் நிலை உருவாகிவிடும் போல் உள்ளது. பிழைக்க வழியில்லை
என்றால் அரசியல் கட்சி என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர் (இந்த கருத்து
எல்லோருக்குமானது அல்ல, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே).
அன்றைய
காலகட்டத்தில் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பின்னர் அங்கு மனகசப்பு
ஏற்பட்டால் மட்டுமே பிரிந்து வந்து வேறு கட்சியை தொடங்குவர். ஆனால் இன்றோ
மக்களுக்கு நல்லது செய்றேன் பேர் வழி என்று கூறிகொண்டு அரசியல் கட்சிகளை
தொடங்குகின்றனர்.

பிரதானம்
இதற்கு
டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என்ற
கட்சியை தொடங்கியுள்ளார். இவர் "அம்மா"வையும் "சின்னம்மா"வையும்
ஓரங்கட்டிவிட்டு அண்ணாவையும் எம்ஜிஆரையும் பிரதானப்படுத்தியுள்ளார்.

முழு ஆதரவு
கொடியை
அறிமுகப்படுத்திய பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்ஜிஆர் அண்ணா
வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர்
தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக
அறிவித்துள்ளேன். மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற
இந்தியாவின் இறையான்மையைக் காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு.

இடையூறுகள்
ஆகஸ்ட்
30-ஆம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டிருந்தேன். ஆளும் கட்சியினர்
பதற்றமடைந்து அந்த மாநாட்டிற்கு பல இடையுறுகள் கொடுத்தனர். இதனால் மாநாடு
நடைபெறவில்லை.

ஊழல் குற்றச்சாட்டு
இடைத்தேர்தலில்
போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி யார்
செய்ய நினைத்தாலும் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவேன். நாங்கள்
நிர்வாகத்திற்கு வந்தால் தனி தனி துறைக்கு நிதி ஒதுக்குவோம். 15 ஆண்டுகள்
குஜராத்தில் முதல்வராகவும், 4 ஆண்டுகள் இந்திய பிரதமராக இருக்கும் மோடி
மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று பாஸ்கரன் கூறியுள்ளார்.

மோடியை பிரதமராக்க முடியுமா
இவர்
கட்சி ஆரம்பித்ததே ஆச்சரியம் என்றால் அவர் மோடியை பிரதமராக்கியே தீருவேன்
என சபதம் இடுவது அதை விட பெரிய ஆச்சரியமாகவும் கேலியாகவும் உள்ளது.
இவருக்கு தமிழகத்தில் எத்தனை இடங்களில் செல்வாக்கு இருக்கிறது. இவரது ஒரு
கட்சியால் மட்டுமே மோடியை பிரதமராக்க முடியுமா. இத்தனைக்ககும் மேல் ஊழலற்ற
ஆட்சியை வேறு தருவேன் என்கிறார். ஓகே எப்படியோ பாஸ்கரன் ஆதரவுடன்
தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் சரி!
No comments:
Post a Comment