Latest News

ஆமாம் மோடி அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறேன்! ஜக்கி வாசுதேவ் தடலாடி பேச்சு!

நான் செய்யும் ஒவ்வொரு விசயமும், பாரதத்திற்காகவே மட்டுமே… பாரதிய ஜனதா கட்சிக்காக அல்ல என சத்குரு ஜக்கிவாசுதேவ் விளக்கமளித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக சத்குரு ஜக்கி வாசுதேவ் செயல்பட்டு வருவதாக, பரவலாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவில் மட்டுமல்ல, வேறு எந்த கட்சியிலும் கூட நான் இணையவில்லை என கூறினார். ஜனநாயகத்தில் ஒரு அரசை மக்கள் தேர்வு செய்யும்போது, இந்த நாட்டின் குடிமகனாக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆதரவளிக்க வேண்டியது ஒரு குடிமகனாக எனது கடமையாக கருதுகிறேன்.ஜனநாயகத்தில் தங்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை, தாங்களே புறந்தள்ளிவிட்டு ஓடுவது ஒரு நோயாக பரவி வருகிறது. மக்களில் இருந்த ஒருவர், மக்களுக்காக தலைவராக வருவதே ஜனநாயகம். ஆனால், மக்களால் முதல் நாளில் தேர்வு செய்யப்படும் அரசை, மறுநாளே கவிழ்க்க வேண்டும் என ஒரு சிலர் நினைக்கின்றனர் எனக் கூறிய சத்குரு ஜக்கி வாசுதேவ், 100-200 ஆண்டுகளாக ஒருவரிடம் உள்ள அதிகாரம், மற்றொருவருக்கு கைமாறும்போது, ரத்த ஆறு ஓடுவது வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்தார். 

ஒரே குடும்பத்தில் கூட, ஒருவரிடம் உள்ள அதிகாரம், மற்றொருவருக்கு மாறும்போது, ரத்த ஆறு ஓடுவதாக குறிப்பிட்ட சத்குரு ஜக்கிவாசுதேவ், ஒரு நாட்டில் அரசு அதிகாரத்தை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றித் தர வேண்டுமானால், ஜனநாயகத்தை புறந்தள்ளி ஓடாமல், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது கடமை என்றும் கூறினார். ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களித்ததன் அடிப்படையிலேயே அரசு செயல்படுகிறது என்றும், எதை பற்றியுமே கவலைப்படமால் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பேன் என்று கூறினால், அவன்தான் இந்த ஜனநாயகத்தை சேதப்படுத்தும் முட்டாள் என்றும் சத்குரு ஜக்கிவாசுதேவ் குற்றஞ்சாட்டினார். எது சரி, இந்த நேரத்தில் யார் சரியானவர் என்று நான் நினைக்கிறேனோ அவருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. ஆனால், நான் பாஜக கட்சிக்கு ஆதரவாக அல்ல, பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறேன். நாங்கள் தமிழகத்தில் சில பணிகளை செய்து வருகிறோம், அதற்காக நாங்கள் அதிமுகவில் இணைந்துவிட்டோம் எனக் கூற முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ஆந்திராவில் கல்வித்துறையிலும், கர்நாடகாவில் நதிகள் இணைப்புத் தொடர்பாகவும் செயல்பட்டு வருவதால், அந்தந்த மாநிலங்களை ஆளும் கட்சியில் நாங்கள் சேர்ந்துவிட்டோம் எனக் கூறிவிட முடியுமா என்று கேட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ், கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இயங்குவதால், நாங்கள் பாஜகவில் இணையவில்லை என்றும் தெரிவித்தார்.கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அரசை நாங்கள் கண்மூடித் தனமாக ஆதரிக்கவில்லை. பல குறைகளை சுட்டிக்காட்டியுளோம் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார். அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் வேறு ஒருவருக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கலாம். அப்போதும், அரசுக்கு ஆதரவாக நாங்கள் பணிகளை மேற்கொள்வோம், ஏனெனில் நாங்கள் செய்வது பாரதத்திற்காக மட்டுமே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்காக அல்ல என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.