டெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில்
நாள்தோறும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த படுகிறார்கள். நாடு
முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வந்தாலும் தலைநகர் டெல்லியில்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அரசு
என்னதான் சட்டங்களை கடுமையாக்கினாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
குறைந்தபாடில்லை. இந்நிலையில் டெல்லியில் மகளின் தோழியை தொழிலதிபர் ஒருவர்
அதிகாலையில் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி
குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 18 வயதில் மகள்
ஒருவர் உள்ளார், அவரும் அப்பகுதியை சேர்ந்த அதே வயதுடைய மற்றொரு பெண்ணும்
சிறுவயதிலிருந்தே தோழிகளாக உள்ளனர்.
இந்நிலையில்
கடந்த வியாழக்கிமை அந்த பெண் தனது தோழியை பார்க்க தொழிலதிபரின் வீட்டிற்கு
சென்றுள்ளார். அப்போது தோழியின் தாய் வெளியூர் சென்றிருந்ததால் இரவு
தன்னுடனேயே தங்குமாறு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார் அந்த தோழி.
இதையடுத்து
அவரும் தோழியின் வீட்டிலேயே தங்கினார். தாய் இல்லாததால் இரவு டின்னருக்காக
அவரது தந்தை தனது மகளையும் அவரது தோழியையும் அங்குள்ள சைபர் ஹப்புக்கு
அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த தொழிலதிபர் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதையடுத்து மூன்று பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர்
அந்த பெண் தனது தோழியுடன் அவரது அறையிலேயே படுத்து தூங்கியுள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணின் தந்தை அவரது தோழியை எழுப்பியுள்ளார்.
அந்த நேரத்தில் அருகில் அவரை பார்த்ததும் மிரண்ட அந்த பெண் ஏன் என்ன கேட்டுள்ளார். பேச வேண்டும் வெளியில் வா என கூறி அழைத்துள்ளார்.
சிறுவயதில்
இருந்தே அந்த வீட்டிற்கு வந்து செல்வதால் விபரீதத்தை அறியாமல் வெளியில்
சென்றுள்ளார் அந்த பெண். அப்போது தனது அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற
அவர் கதவை மூடி தாழ்பாள் போட்டுள்ளார்.
அசம்பாவிதம்
நடக்கப்போவதை உணர்ந்த அந்த பெண் தன்னை விட்டு விடும்படி கதறியுள்ளார்.
ஆனால் மதுபோதையில் இருந்ததால் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத அவர்
அந்த பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும்
நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment