கராச்சி: பாக். சட்டசபை தேர்தலில் இந்து மதத்தை சேர்ந்த பெண் சுயே வேட்பாளராக களம் காண்கிறார்.
பாகிஸ்தானின்
சிந்து மாகாணத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில், இந்து மதத்தை சேர்ந்த
பெண் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்ற தகவல்தான் தற்போது செம
வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் தேர்தலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்
ஒருவர், மாகாண தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறையாகும்.
தேர்தல்
வரும் 25 அன்று நடைபெற உள்ளது. மேவார் சமுதாயத்தை சேர்ந்த பார்மர் (31)
என்பவர், சிந்து மாகாணத்தின், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்-56
தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பலர் வசிக்கின்றனர்.
இதுகுறித்து சுயேட்சையாக போட்டியிடும் அவர் கூறியதாவது:
முந்தைய
அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் தான் போட்டியிடுகிறேன்.
இந்த பகுதியில், அடிப்படை வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை. 21ம்
நூற்றாண்டில், அடிப்படையான சுகாதார வசதிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி
நிலையங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment