திருப்பத்தூா: திருப்பத்தூா
அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை
செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூா
அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோந்த
அழகு என்பவர் மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா
செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள புதா ஒன்றில்
வீசப்பட்டுள்ளாா. செவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா
சிறுமியின் உடல் அரை நிாவாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி
காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளாா.
தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா
ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா காவல் துணை கண்காணிப்பாளா இளங்கோ,
சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா கொலை
நடந்த இடத்தில் குவிந்தனா.
மருத்துவக் கல்லூரியிலிருந்து
மருத்துவா செந்தில்குமாா வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா
என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு
மோப்பம் செய்து ஊாகோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது. கைரேகை நிபுணா
பாலா தலைமையில் குழுவினா ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா. இறந்த சிறுமிக்கு
கருப்பாயி என்ற அம்மாவும், சொணம் என்ற தங்கையும் அழகுராஜ் என்ற அண்ணனும்
உள்ளனா. மேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி.
காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா காவல் துணை கண்காணிப்பாளா இளங்கோ
தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டாா.
இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை
கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பட்டப்பகலில் இக்கொலை நடந்திருப்பதால் கிராமத்தின் அச்சத்தில் உள்ளனா.
No comments:
Post a Comment