புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள்
போட்டியில் பாகிஸ்தானின் பகர் ஜமான், இமாம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304
ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்தது. இதில், பகர் ஜமான் இரட்டை சதம்
அடிக்க, பாகிஸ்தான் 244 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வே
சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஏற்கனவே தொடரை
கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டி புலவாயோவில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற
பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
பகர் மிரட்டல்
பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹாக், பகர் ஜமான் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது.
டிரிபானோ பந்துவீச்சில் பகர் இரண்டு பவுண்டரி விளாசினார்.
தன் பங்கிற்கு நகரவாவின் 25வது ஓவரில் இமாம் 2 பவுண்டரி அடித்தார்.
தொடர்ந்து எதிரணி பந்துவீச்சை சிதறடித்த பகர் 3வது சதம் அடித்தார். இமாம்
ஒரு நாள் அரங்கில் 3வது சதத்தை பதிவு செய்தார். இவர்களை பிரிக்க பவுலர்கள்
எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. ஒருவழியாக, முதல்
விக்கெட்டுக்கு 304 ரன் சேர்த்தபோது, இமாம் (113) ஆட்டமிழந்தார். தொடர்ந்து
வாணவேடிக்கை காட்டிய பகர், முதல் இரட்டை சதம் அடித்தார். இவருக்கு
கைகொடுத்த ஆசிப் அலி அரை சதம் எட்டினார். முடிவில், பாகிஸ்தான் அணி 50
ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 399 ரன்கள் எடுத்தது. பகர் (210), ஆசிப் அலி
(50) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஷாதப் அசத்தல்
கடின
இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் ஹாமில்டன் மசகட்சா (22),
டினாசி (3) விரைவில் திரும்பினர். சிகும்பரா (37) அணியை கைவிட்டார். ஷாதப்
கான் 'சுழலில்' பீட்டர் மூர் (20), டிரிபானோ (44) சிக்கினர். மற்றவர்கள்
ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 42.4 ஓவரில் 155 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
உலக சாதனை
இப்போட்டியில்
பகர், இமாம் ஜோடி 304 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், ஒரு நாள் போட்டியில்
முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற உலக சாதனை படைத்தது.
இதற்கு முன், இலங்கையின் உபுல் தரங்கா, ஜெயசூர்யா ஜோடி 286 ரன்கள்
சேர்த்ததே (எதிர்- இங்கிலாந்து, லீட்ஸ், 2006) அதிகமாக இருந்தது.
முதல் வீரர்
ஒரு
நாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை
பெற்றார் பகர் ஜமான். இதற்கு முன், சயீத் அன்வர் 194 ரன்கள் (எதிர்-
இந்தியா, 1987, சென்னை) எடுத்ததே அதிகம்.
6
அபாரமாக
விளையாடிய பகர், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 6வது வீரரானார்.
இந்தியாவின் சச்சின், சேவக், ரோகித் சர்மா, நியூசிலாந்தின் கப்டில், வெஸ்ட்
இண்டீசின் கெய்ல் இந்த இலக்கை எட்டி உள்ளனர்.
* இது ஒரு நாள் போட்டியில் பதிவான 8வது இரட்டை சதம். இந்தியாவின் ரோகித் அதிகபட்சமாக 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
4
ஒரு
நாள் போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடிகள்
வரிசையில் பகர், இமாம் ஜோடி (304) 4வது இடம் பிடித்தது. முதல் இடத்தில்
வெஸ்ட் இண்டீசின் கெய்ல், சாமுவேல்ஸ் (372 ரன், எதிர்- ஜிம்பாப்வே, 2வது
விக்., கான்பெரா) உள்ளனர்.
1
பாகிஸ்தான்
அணி சார்பில் ஒரு நாள் போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்
(304) சேர்த்த ஜோடியானது பகர், இமாம். இதற்கு முன், ஆமிர் சோகைல், இன்சமாம்
ஜோடி (2வது விக்., எதிர்- நியூசி., 1994, சார்ஜா) 263 ரன் சேர்த்ததே
அதிகம்.
முதலிடம்
ஒரு நாள் போட்டியில்
பாகிஸ்தான் அணி தனது அதிகபட்ச (399/1) ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்,
கடந்த 2010ல் தம்புலாவில் நடந்த போட்டியில் (எதிர்- வங்கதேசம்) 385/7
ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது.
No comments:
Post a Comment