Latest News

பள்ளி கட்டணம் செலுத்தாததால் 59 குழந்தைகளை பேஸ்மெண்ட்டில் பூட்டிய அவலம்... டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாததால், நர்சரி வகுப்பில் படிக்கும் பெண் குழந்தைகள் 59 பேர் பள்ளியின் அடித்தளத்தில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தாததால் நான்கு, ஐந்து வயதே உள்ள பெண் குழந்தைகளை தனியார் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அடித்தள அறையில் வைத்து பூட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த இரக்கமற்ற சம்பவம் டெல்லியில் உள்ள ரேபேக்கா பெண்கள் பொதுப் பள்ளியில்தான் நடந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் கழித்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்களுக்கு கடந்த வாரம்தான் தெரியவந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் கோபமடைந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

குழந்தைகள் அடித்தள அறையில் பூட்டி வைத்ததை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால், சில குழந்தைகளின் பாதுகாவலர்கள் பள்ளிக் கட்டணம் முன்கூட்டியே செலுத்தியிருந்தாலும் கூட தங்கள் குழந்தைகளும் அடித்தளத்தில் வைத்து பூட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து பள்ளியில் வேலை செய்பவகளிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

ரெபேக்கா பெண்கள் பொதுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஃபரா திபா பள்ளியின் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து கூறியதாவது: பள்ளியின் அடித்தளம் குழந்தைகள் விளையாடும் இடம். அங்கே எப்போதும் 2 ஆசிரியர்கள் பாதுகாவலாக இருப்பார்கள். பள்ளியில் ஃபேன் பழுதானதால் அவர்கள் அடித்தளத்தில் அமர்ந்துகொண்டிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தவறானது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பள்ளியில் அடித்தளத்தில் வைக்கப்பட்டதாகக் கூறும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

புகழ்பெற்ற ஹம்டார்ட் குழுமத்துடன் தொடர்புள்ள இந்த பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.2,500 லிருந்து ரூ.2,900 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.