டெல்லி: பிரணாப் முகர்ஜியை வைத்து போட்டோஷாப் புகைப்படத்தை வெளியிட்ட
பாஜக, ஆர்எஸ்எஸ் ஐடி விங்கை, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி
கடுமையாக சாடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதற்கு சிறப்பு
விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்
குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ்
நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்
பிரணாப்பிற்கு
ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுக்கப்பட்ட போதே பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா
முகர்ஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவரது பேச்சை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ்
தலைவர்கள் பலர் பிரணாப்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம், பிரணாப்பின் மகள், ஜெய்ராம் ரமேஷ்,
ஜாபர் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்
பிரணாப்பை வைத்து பாஜக, ஆர்எஸ்எஸ் ஐடி விங் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளது.
அதில் பிரணாப் சாதாரணமாக நிற்கும் புகைப்படத்தை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போலவே
நிற்பதாக சித்தரித்து, தொப்பி மாட்டிவிட்டு, பொய்யாக போட்டோஷாப் செய்து
பரப்பி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் நேற்று வைரலானது.
இந்த
போட்டோ பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி
டிவிட்டரில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார். அதில் ''பாருங்கள்,
இதுகுறித்துதான் பயந்து கொண்டு இருந்தேன். என் அப்பாவை இதுகுறித்துதான்
எச்சரித்தேன். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் பாஜக, ஆர்எஸ்எஸின்
சூழ்ச்சி அணியினர் வேகமாக செயல்பட்டுள்ளனர்'' என்று போட்டோவை ஷேர் செய்து
பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment