புனே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில்
பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம்
தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா
மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின்
200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர்
பிராமணர்கள் படையை தலித்துகள் படையான மகர் சேனை கோரேகானில் வீழ்த்தியதன்
நினைவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
அப்போது பெரும் வன்முறை
வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே
போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே
நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும்
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை
கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால் இது
தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என
வாதிடப்பட்டது.
புனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment