சென்னை: தாவி...தாவி... தாவி முடித்து தற்போது தாய் கழகத்திலேயே அடைக்கலம் ஆகப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் தெரியுங்களா?
திமுக,
மதிமுக, அதிமுக, தினகரன் அணி என மாறி மாறி கட்சிகள் தாவி அரசியல் செய்து
வந்த நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் புதிய அரசியல் கட்சி
ஆரம்பித்ததால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்த கட்சியில் இருந்து
வெளியேறினார் நாஞ்சில் சம்பத்.
இனிமேல் என்னுடைய வாழ்வில் அரசியல் இல்லை. இனிமேல் தமிழுக்கு மட்டுமே தொண்டு செய்யவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் 'எல்.கே.ஜி' என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்
தற்போது அவர் மீண்டும் மதிமுகவில் இணையவுள்ளதாக பேஸ்புக்கில் சிலர்
பதிவிட்டு வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும்,
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment