பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லை என்று கூறி கடை உரிமையாளர் மற்றும்
அவரது மனைவியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலியில்
நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே அமான் வாணியம்பாடி
பிரியாணி ஸ்டால் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று
இரவு 4 பேர் வந்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்கள் பிரியாணி வாங்கி
சென்றனர்.
பின்னர் அவர்கள் சிறிது நேரம் கழித்து அதாவது பிரியாணியை
சாப்பிட்டு விட்டு மீண்டும் பிரியாணி கடைக்கு வந்துள்ளனர். அப்போது
அவர்கள், கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் பிரியாணியில் கறி இல்லை
என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த நபர்கள், பிரியாணி கடை உரிமையாளர் மற்றும்
அவரது மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த
தாக்குதலில் அவர்கள் படுக்யமடைந்தனர். அவர்கள் இருவரையும் அருகில்
இருந்தோர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சுத்தமல்லி வியாபாரிகள் கடையடைப்பு
போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment