டில்லி:
குடியரசு தலைவர்
மாளிகை வளாகத்தில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள பூட்டிய அறை
ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் ஊழியர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தலைநகர்
டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கென
தனியாக பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இருந்து
ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறையில்
இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர்,
அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று
கிடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது,
நான்காம் நிலை ஊழியரான திரிலோகி சாந்த் என்றும், கடந்த சில மாதங்களாக
உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தாகவும் கூறப்படுகிறது.
இவரது மரணம் சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment