போபால்:
விமானம்
தரையிறங்கும்போது ஓடு பாதையில் இருந்து விலகியது. இதன் காரணமாக பரபரப்பு
ஏற்பட்டது. ஆனால், விமானியின் சாமர்த்தியமாக காரணமாக விபத்து
தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த 125 பயணிகளும்
அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
இன்று காலை வழக்கம்போல மும்பையில்
இருந்து மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு பயணிகள் விமானம் புறப்பட்டுச்
சென்றது. அந்த விமானத்தில் 125 பேர் பயணம் செய்தனர். விமானம் போபால் விமான
நிலையத்தில் தரையிறங்கும்போது, விமான ஓடு பாதையை விட்டு விலகி சென்றது.
இதன் காரணமாக பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தார்.
ஆனால் விமானகளின் சாதுர்யம் காரணமாக விமானம் அதிரடியாக நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த 125 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
உடடினயாக
தீயணைப்பு படையினரும், முதலுதவி குழுவினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
விமானத்தில் இருந்த பயணிகளை அவசரமாக இறக்கப்பட்டனர்.
விமானத்தின்
முன் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து
ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment