சென்னை மெரினா அருகே இருக்கும் நேப்பியர் பாலத்திலிருந்து ஃபயாஸ் என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஃபயாஸ்
சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவருகிறார். இவர் வாகன நிறுவனம் ஒன்றின்
உதிரி பாக விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம்
ஆகி இராது பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு கடந்த சில மாதங்களாக
நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.இதனால் பெரிய மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் இன்று தற்கொலை முடிவை எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கும் போன்
செய்து தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், என்னை கடைசியாக பார்க்க
விரும்பும் நபர்கள் நேப்பியர் பாலத்திற்கு வாருங்கள் என்றுள்ளார்.
அதோடு, அங்கு அவரை பார்க்க வந்த நண்பரிடம் , தன்னுடைய மொபைல் போன் பர்ஸை
கொடுத்துவிட்டு, அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீழே குதித்துள்ளார்.
மற்ற நண்பர்கள் அவர் விழுந்த பின்தான் அங்கு வந்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது
கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் ஃபயாஸின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.ஃபயாஸின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர்
ஈடுபட்டுள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment