உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்திராணி சிகிச்சை முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பி உள்ளார்.
இளம்
பெண் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள,
முக்கிய குற்றவாளியான, இந்திராணி முகர்ஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த,
2012, ஏப்ரலில், இந்திராணியின் மகள் ஷீனா போரா மர்மமான முறையில் கொலை
செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது இந்திராணியும் மற்றும் சிலரும் என்று
தெரிய வந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
பைகுல்லா சிறையில்
அடைக்கப்பட்டுள்ள இந்திராணி, சமீபத்தில் சுய நினைவிழந்த நிலையில், மும்பை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அவரை சோதித்த டாக்டர்கள், மன
அழுத்தத்துக்கான மருந்தை அதிகளவில் உட்கொண்டதாக தெரிவித்தனர். சிகிச்சை
முடிந்து சிறை திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் இரவு இந்திராணிக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து
மும்பை, ஜே.ஜே.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மீண்டும்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சையளித்து
வந்தனர். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment