கர்நாடக அமைச்சரவையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு கல்வித் துறை ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா
சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்
மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் மஜத
கட்சியினருக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜேடிஎஸ் எம்எல்ஏ
ஜி.டி. தேவகௌடாவுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்
சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்ததற்காகவே
முக்கிய துறையை குமாரசாமி ஒதுக்கியுள்ளார். ஆனால் இவர் 8-ஆம் வகுப்பு வரை
மட்டுமே படித்துள்ளதால் இந்த ஒதுக்கீடு குறித்து சர்ச்சை எழுந்தது.
இது குறித்து முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சில
துறைகளில் சிறப்பாக செயல்பட விருப்பப்படுவர். ஆனால் அனைத்து துறைகளிலும்
திறமையாக வேலை செய்ய சந்தர்ப்பம் உள்ளது. நான் என்ன படித்துள்ளேன். நான்
முதல்வராக பணியாற்றுகிறேனே. அவருக்கு நிதித் துறை ஒதுக்கீடு செய்யலாமா.
சில
துறைகளை சிலருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் அதுபோன்ற
முடிவுகளை கட்சிதான் எடுக்கும் என்றார் குமாரசாமி. இவர் பிஎஸ்சி
படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment