தூத்துக்குடி கலவரம் குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமைக்குழு
விரைவில் தமிழகம் வருகிறது. துப்பாக்கிச்சூடு பற்றி 2 வாரங்களில்
விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி போராட்டம்
நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை
முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல் துறையினருடன் கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல் வீச்சு, கண்ணீர் புகை,தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை
நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக
அரசுஅரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்
நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் வாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும்
ஒட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆலையின் விரிவாக்கத்துக்கு தரப்பட்ட
நிலஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்
தூத்துக்குடியில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்க தேசிய மனிதக்குழு
தமிழகம் வருகை தர உள்ளது. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய மனித உரிமை
ஆணையம் விசாரிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனுவை சபரீஷ் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த
மனுமீதான விசாரணையின்போது, தூத்துக்குடி கலவரம் குறித்து 4 பேர் கெண்ட
குழுவை, தமிழகம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு, இரண்டு
வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தகவல் வெளியாகி
உள்ளது.
No comments:
Post a Comment