கர்நாடகாவில் ஹோகார்ட்டி தொகுதியை சேர்ந்த பல்வேறு கிராம
மக்கள் மாநில தேர்தலை புறக்கணித்துள்ளனர். அந்த தொகுதியில் கொலை
செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரின் வழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை
என்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல்
தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம்
தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222
தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர்
மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில்
இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவின் ஹோகார்ட்டி தொகுதியில் உள்ள பல்வேறு
கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதற்கு மிக முக்கியமான காரணம்
ஒன்று சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் இருக்கும் ஹுனாசிகட்டி கிராமத்தில்
உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் மரணம் அடைந்ததற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை
என்று மக்கள் போராடி வருகிறார்கள்.
அந்த 4 மாத கர்ப்பிணி பெண்,
அவரது கணவன் ரவி என்பவனால் கடந்த மே 6ம் தேதி கொலை செய்யப்பட்டார். அந்த
பெண் மிகவும் துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைக்கு, ரவியின் பெற்றோர்களும் காரணம்தான் என்று கூறப்படுகிறது.
ஆனால்
போலீஸ் ரவியை மட்டுமே கைது செய்துள்ளனர். இன்னும் அந்த குடும்பத்தினரை
கைது செய்யவில்லை. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.
ஆனால், போலீஸ் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்
தற்போது மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தற்போது போலீஸ்
இவர்களிடம் வாக்குவாதம் நடத்தி வாக்களிக்க அழைத்தனர். ஆனால் குடும்ப
உறுப்பினர்களை கைது செய்தால் மட்டுமே, வாக்களிப்போம் என்று மக்கள் உறுதியாக
இருக்கிறார்கள்.
source: oneindia.com
No comments:
Post a Comment