விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான
'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார்
திட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்று
இருப்பதாக படத்தில் காட்டப்பட்டது.
இதனால், இரும்புத்திரை
படத்திற்கு பா.ஜ.க-வினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இரும்புத்திரை படத்துக்கு எதிராக நேற்று சென்னை காசி தியேட்டரில் போராட்டம்
நடைபெற்றது. விஷால் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி
விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து கருத்து
தெரிவித்துள்ள நடிகர் விஷால், "சமூகத்தில் நடந்துவரும் சமூக பிரச்னைகள்,
வரும்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்னைகள் குறித்து படத்தில்
பேசியுள்ளோம்.
யாருக்கும் ஆதரவாகவோ, திட்டமிட்டு விமர்சித்தோ படத்தில் கருத்து
சொல்லப்படவில்லை. அதனால், நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
நான் சட்டத்தை மதிப்பவன். காவல்துறையை நம்புபவன். படத்திற்கு எதிரான
எதிர்ப்புகள், போராட்டங்களை காவல்துறையினர் பார்த்துக்கொள்வார்கள்" எனத்
தெரிவித்துள்ளார்.
source: filmibeat.com
No comments:
Post a Comment