
கடும் விளைவை சந்திக்க நேரிடும்...
தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுங்கள்... கர்நாடகாவுக்கு
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே
மாதத்திற்குள் தமிழகத்திற்கு கர்நாடகா உடன் 4 டி.எம்.சி., தண்ணீர்
திறந்துவிட வேண்டும். தவறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும்
என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காவிரி
குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதிகள், தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரை
காவிரியில் திறந்துவிட வேண்டும்.
உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும்.
காவிரி
விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம். அது பற்றி கவலையில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். இந்த
விவகாரத்தில் என்ன செய்தோம் என்பது குறித்து மத்திய அரசு பிரமாண பத்திரம்
தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை 8 ம் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.
விசாரணையின்
போது கர்நாடக அரசு வழக்கறிஞர் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர்.
No comments:
Post a Comment