
மோதிஹாரி பீகார் மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் பேருந்து தலைகுப்புற
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
முஸாபர்பூரில் இருந்து பேருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மொத்தம் 32 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தின் மோதிஹாரி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
தீப்பிடித்த பேருந்து
யூகிப்பதற்குள்
யூகிப்பதற்குள்
அப்போது
யாரும் எதிர்பாரத விதமாக திடீரென பேருந்து தீ பிடித்தது. என்ன நடக்கிறது
என்பதை பேருந்தில் இருந்தவர்கள் யூகிப்பதற்குள் பேருந்து முழுவதும் தீ
மளமளவென பரவியது.
27 பேர் உடல் கருகி பலி சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை
பலி அதிகரிக்கும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment