
அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை
கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட்
தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான நீட்
தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில்
பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில்
தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும்
அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது கட்சி
நிர்வாகிகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக தமிழக
மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வேல்முருகன் தென்மண்டல சிபிஎஸ்இ இயக்குநரிடம் மனு அளித்தார்.
மேலும்
வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல
சிபிஎஸ்இ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு மையத்தை
தமிழகத்திலேயே அமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளார். வேல்முருகன் 3 நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளதால் சிபிஎஸ்இ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment