தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி புதன்கிழமை வெளியாகும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்
2 பொதுத் தேர்வு முடிவுகள் 16ம் தேதி காலை 9.30 மணியளவில் அரசு
இணையதளங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ள அரசுத் தேர்வு இயக்ககம்,
இணையதள முகவரிகளையும் வெளியிட்டுள்ளது.
அதில்,
www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு
முடிவுகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளலாம் என்றும், தேர்வு முடிவுகள்
சார்ந்த விவரங்களை ஊடகங்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும்
வகையில் புதிய முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அரசு தேர்வு
இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment