
கொல்கத்தா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தின் உள்ளே சிலர்
செருப்பை வீசினர். செருப்பு வீசியவர்கள் உடனடியாக
அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது.
செருப்பு வீசியவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. செருப்பு வீசியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு விதமான போராட்டங்களுக்கு மத்தியில் வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் மைதானத்தை வந்தடைந்தது.
தயாரிப்பாளர்
சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள்
போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சீமான், பாரதி ராஜா, வைரமுத்து,
வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆங்காங்கே
போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள்
தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ரத்து
செய்யவேண்டும், தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என பலர் தெரிவித்து வந்தனர். இதனால் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று
காலையில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு கட்சியினரும்
போராட்டம் நடத்தி வந்தனர். சென்னையில் நடைபெறும் போட்டி தொடங்க இன்னும்
சிறிது நேரமே உள்ள நிலையில் மைதானத்தை சுற்றி நடைபெறும் போராட்டங்கள்
மிகவும் பெரிதாக வலுத்து வருகின்றன. திருவல்லிகேணி, அண்ணாசாலை போன்ற
இடங்களில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை
கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள்
மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை
திடீரென தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். மைதானத்தை சுற்றி பலத்த
போலீஸ் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தும் இவர்கள் தொடர்ந்து மைதானத்தை நோக்கி
சென்றுக்கொண்டிருகிறார்கள். இதனால் சேப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள
பகுதிகள் போராட்டகளமாக மாறியுள்ளது.
ஐ.பி.எல்
போட்டிக்கான டிக்கெட்டுகளை கிழித்து சென்னை அண்ணா சாலையில் எஸ்.டி.பிஐ
கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரஜினி
ரசிகர் மன்றம், நாம் தமிழர் கட்சியியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து
மாற்றம் செய்யப்பட்டிருந்தது ஆனால் தற்போது நடைபெறும் போராட்டங்களினால்
அண்ணாசாலை பகுதியில் முற்றிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.
No comments:
Post a Comment