
தரம்சாலா: ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹிமாச்சல்
பிரதேசத்தின் நூர்பூர் தொகுதியில் உள்ள மால்க்வால் பகுதியில் தனியார்
பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆசிரியர்கள்
உட்பட 60 பேருடன் பேருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் 27 மாணவர்கள்
மற்றும் பேருந்தின் ஓட்டுநரான 67 வயதான மதன் லால் மற்றும் இரண்டு
ஆசிரியைகள் ஆகிய 30 பேர் உயிரிழந்தனர்.
27 மாணவர்கள் உயிரிழந்ததை ஹிமாச்சல் பிரதேசத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் உறுதி செய்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment