
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.
கர்நாடக
சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே
12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்
என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது அங்கு
பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக
உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. சில
நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த
நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.
முக்கிய
வேட்பாளர்கள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது.
சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையாவின் பழைய வருணா தொகுதியில்
போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மொத்தம் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சித்தராமையா இந்தமுறை தன்னுடைய பழைய
தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.
முக்கியமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
source: oneindia.com
No comments:
Post a Comment