Latest News

18 பேர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயற்சி- பதறிய கடலூர் கலெக்டர் ஆபீஸ் அதிகாரிகள்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசுக்குச் சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததால், வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் அவதிப்பட்ட விவசாயி தங்க பாண்டியன், தனது குடும்பத்தினர் 18 பேருடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி தங்க பாண்டியன். நொச்சிக்காடு கிராமத்தில், இவர் வீட்டுக்குச் செல்லும் அரசு புறம்போக்கு இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த செங்கல்வர ராவ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால், தங்க பாண்டியன் தனது வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் அவதிப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் பலமுறை வருவாய்த்துறையினருக்குப் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால், இன்று தனது குடும்பத்தினர் 6 பெண்கள், 8 குழந்தைகள், 4 ஆண்கள் உட்பட 18 பேர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூடட்டத்துக்கு வந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் தங்க பாண்டியன் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தி வந்துள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த தங்க பாண்டியன் குடும்பத்தினர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து, அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.

இதேபோல, கடலூர் அருகே உள்ள அம்பூட்டியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற விவசாயி, கந்துவட்டிக் கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.