
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை திருச்செந்தூர்
கோவிலில் தாக்கிய நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது கொடுப்போம் என
பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
மரபணு மாற்றம்
செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் அய்யாக்கண்ணு.
இது தொடர்பான பிரசுரங்களை திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் நேற்று
அய்யாக்கண்ணு தமது ஆதரவாளர்களுடன் விநியோகித்தார்.
அப்போது அங்கு
வந்த நெல்லையம்மாள் என்ற பாஜக பிரமுகர், இந்த அய்யாக்கண்ணுக்கு வேற வேலை
இல்லை.. ப்ராடு என கூறி பிரசுரங்களை விநியோகிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்.
அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.
இதில் ஆத்திரமடைந்த நெல்லையம்மாள், அய்யாக்கண்ணு கன்னத்தில்
அறைந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமது
ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:
பொய்யும்
புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும்
அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை
உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு
தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது
வழங்குவோம்
இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment