
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று
ஆட்சி அமைக்கும் எனக்கூறியுள்ள அக்கட்சி முன்னாள் தலைவர் சோனியா, பா.ஜ.,வை
ஆட்சிக்கு வர விட மாட்டோம் எனவும் கூறியுள்ளார். புது வழி மும்பையில்
நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:
காங்கிரசில் அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும் என விரும்புகிறார்.
அதற்காக
மூத்த தலைவர்களை அவர் புறக்கணிக்கவில்லை. ராகுலுக்கு தனது பொறுப்புகள்
குறித்து தெரியும். அவருக்கு அறிவுரை வழங்க நான் உள்ளேன். அரசியலில் தனது
பங்கு குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும். மக்களுடன் ஒன்றிணைய
புது வழிகளை காங்கிரஸ் கண்டுபிடிக்க வேண்டும்.
மன்மோகனுக்கு பதவி ஏன் கட்சி அனுமதிக்கும் பட்சத்தில், லோக்சபா தேர்தலில்
போட்டியிட தயாராக உள்ளேன். எனக்கான எல்லை என்ன என்பது எனக்கு தெரியும்.
இதனால் தான் 2014ல் மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தேன். பிரதமர்
பதவியில் என்னை விட மன்மோகன் சிங் சிறப்பாக செயல்படுவார் என கருதினேன்.
காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என பா.ஜ., பிரசாரம் செய்கிறது. நானும் ராஜிவும்
பல கோயில்களுக்கு சென்றிருந்தாலும் அதனை வெளியில் சொல்வதில்லை. நேரு
குடும்பத்தை சாராதவர்களாலும் காங்கிரசை காப்பாற்ற முடியும். நாட்டு
நலனுக்காக... பல மாநிலங்களில் எதிரெதிர் திசையில் இருப்பதால், தேசிய அளவில்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வருவதில் சிக்கல் உள்ளது. எங்கள்
கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு
அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும்.
2014 லோக்சபா தேர்தலின் போது
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி எதையும் பா.ஜ., நிறைவேற்றவில்லை. இதனால்
மக்களுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், வெற்றி எங்களுக்கு கிடைக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது. 2019ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்
தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். பா.ஜ.,வை
ஆட்சிக்கு வர விட மாட்டோம். பார்லிமென்டில் பேசுவது எங்களது உரிமை. நாங்கள்
பேசியதை வாஜ்பாய் மதித்தார். பார்லிமென்ட் நடவடிக்கைகளை பெரிதும்
மதித்தார். மத்திய அரசு மீது தாக்கு எதிர்க்கட்சிகளின் குரல்
ஒடுக்கப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி
செய்வேன். வெற்று கோஷங்கள் மீது நம்பிக்கையில்லை. நமது சுதந்திரம் மீது
தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. தலித்களுக்கு எதிராக அதிகளவில்
வன்முறை நடக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசின் துறைகள்
ஏவிவிடப்பட்டுள்ளன. வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை. மாற்று
கருத்து வெளியிட அனுமதிக்கப்படவில்லை. நல்லுறவு, நல்லிணக்கம் ஆகியவை
பாதிக்கப்படுகின்றன. மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக ஆதார் மாறியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment