
ஆவடியில் உடல் எடைக்குறைப்பு லேகியம் சாப்பிட்டு இளைஞர்
உயிரிழந்தது தொடர்பாக லேகியம் விற்பனையாளரை பிடித்து அடித்த பொதுமக்கள்
காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல்
அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப், 28. ரியல் எஸ்டேட் தொழில்
செய்து வருகிறார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில்
உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவருக்கு
வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட
அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு
சிகிச்சை பலனின்றி பிரதீப் இன்று உயிரிழந்தார்.
லேகியம் சாப்பிட்டபிறகே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதீப் உடலை பிரேத பரிசோதனை செய்து டாக்டர்கள் அறிக்கை அளித்த பிறகே அவரது மரணத்திற்கான முழு விவரம் தெரியவரும்.
இதுதொடர்பாக
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரதீப் இறந்தது
பற்றி தகவல் கிடைத்ததும் லேகியம் விற்ற நபர் தலைமறைவாகிவிட்டனர். இந்த
நிலையில் சாலையோரத்தில் மீண்டும் கூடாரம் அமைத்து லேகியம் விற்க வட
மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த
பொதுமக்கள் லேகியம் விற்றவர்களை பிடித்து அடித்து போலீசாரிடம்
ஒப்படைத்தனர்.
சாலையோரங்களில் பாட்டில்களில் அடைத்து வைத்து லேகியம்
விற்பனை செய்பவர்களிடம் அவசரத்திற்கு வாங்கி சாப்பிட்ட பிரதீப் உயிரிழந்த
சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment