
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையில்
நிறுவப்பட்டுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி திறந்துவைத்தார்.
6,691
சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், இந்தியாவிலேயே
முதல் முறையாக பூச்சிகளுக்கு என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு,
''மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. வேளாண்
உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது பூச்சிகள்.
பூச்சிகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம்,
மாணவர்களுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் உதவும் நோக்கில்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும்
வாழ்த்துகள்'' என்றார்.
எடப்பாடி பழனிசாமி, ''நானும் ஒரு விவசாயி. பூச்சிகளால் ஏற்படும்
பாதிப்பையும் பலனையும் நன்கு அறிவேன். இந்தியாவிலேயே பூச்சிகளுக்கு என
முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், 5 கோடி ரூபாய்
செலவில் 6,691சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு
காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகளின் மாதிரிகள் பிரமிப்பை
ஏற்படுத்துகிறது. இந்த அருங்காட்சியகம் உருவாகக் காரணமாக இருந்த மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் என்
பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
என்ன இருக்கிறது அருங்காட்சியகத்தில்?
இந்த
பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 80,000-க்கும் மேற்பட்ட பூச்சிகளின்
பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், உயிருள்ள பூச்சிகள் அவற்றின் வாழ்க்கை வரலாறு,
செயல்படும் பண்புகள் போன்றவற்றை விளக்கும் ஒலி, ஒளிப் பதிவுகள்
அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில், பார்பவர்ககளைக்
கவரும் வண்ணம் பிரமாண்டமான violin mantis பூச்சியின் வடிவம்
அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கவரும்வண்ணம் வண்ணத்துப்பூச்சி
வடிவத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment