சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகளை பெற்ற அதிரை டாக்டர் ஜமால் முஹம்மது!
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் டாக்டர் ஜமால் முஹம்மது. இவர் செங்கல்பட்டுவை அருகே அமைந்துள்ள ஶ்ரீ சத்திய சார் மருத்துவ கல்லூரியில் இணை-பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மருத்துவ சேவை பாராட்டி தலைநகர் டெல்லியில் இந்தியன் சாலிடாரிட்டி கவுன்சில், சர்வதேச கல்வி மற்றும் மேலாண்மை குழுவின் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் அதிரை டாக்டர் ஜமால் முஹம்மதுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது, விஜய் ரத்தன் தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மருத்துவத்துறையில் சிறப்பாக செயலாற்றி வரும் ஜமால் முஹம்மதுக்கு அதிரை பிறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
டாக்டர் பட்டம் பெற்ற அதிரையை சேர்ந்த நல்லாசிரியர் சாகுல் ஹமீது!
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. வர் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் வணிகவியல் பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கல்வி பயின்று நிறைவு செய்துள்ள வந்த இவருக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் (Phd) பட்டம் வழங்கின்கவுரவிக்கப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹாமீது மாணவர்களிடம் அன்புடன் பழகி கல்வியை பயிற்றுவிக்க கூடியவர்.
வணிகவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற அதிரை மாஜித்!
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் முஹம்மத் மாஜித். அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராக உள்ளார். அத்துடன் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் ஆய்வுக்கல்வி முனைவர் (Phd) படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாஜித் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் பட்டம் பெற்ற அதிரை ஆஷிக் மௌலானா!
நேற்று 21-02-18 புதன் கிழமை திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 34 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் விஞ்ஞான பார்வையில் கியாமத் நாளின் அடையாளங்களும் தற்கால நிகழ்வுகளும் என்ற தலைப்பில் அரபி மொழியில் டாக்டர் பட்டத்தை (Phd) அதிரையை சேர்ந்த சிபகத்துல்லாஹ் அவர்களின் மகன் ஆஷிக் அஹமது பெற்றுள்ளார். இவர் ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபு பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment