
காவலர் குடியிருப்பு கட்டுவதற்காக, ஊட்டி சர்ச் ஹில் பகுதியில்
காவல்துறைக்குச் சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான சைப்ரஸ், யூகலிப்டஸ்
மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி
மாவட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகில் சர்ச் ஹில் என்ற பகுதி
அமைந்துள்ளது. இங்கு காவல்துறைக்குச் சொந்தமாகப் பல ஏக்கர் நிலம் உள்ளது.
அதில் சைப்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மரங்களை
வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறை
அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "சர்ச் ஹில் பகுதியில் காவல்துறைக்குச்
சொந்தமான இடம் உள்ளது.
அங்கு காவலர் குடியிருப்பு கட்ட அனுமதி கேட்டு, வளர்ந்திருந்த 490 சைப்ரஸ்
மற்றும் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த காவல்துறை சார்பில்
மாவட்டக் கலெக்டர் மற்றும் வடக்கு கோட் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம்
விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மலைப்பகுதி மரங்கள்
பாதுகாப்பு சட்டத்தின் மாவட்ட அளவிலான குழு கலெக்டர் தலைமையில் கூடி
அனுமதியளித்துள்ளது. இதையடுத்து மரங்கள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது" என்றனர்.
No comments:
Post a Comment