
லாலு கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பை ஏற்க மாயாவதி மறுத்துவிட்டார்.
உ.பி.யில்
தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பேச தனக்கு
வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்
மாயாவதி ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போதே மாயாவதி
மீண்டும் ராஜ்யசபா எம்.பி ஆக பீகாரில் இருந்து தேர்வு செய்ய ஆதரவு
அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்
தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 58 எம்பி பதவிகளுக்கான தேர்தல்
அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாயாவதி கட்சியில் ஒரு
எம்.பி.யை தேர்வு செய்வதற்கான பலம் இல்லை.
இதைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் வழங்க முன்வந்த ராஜ்யசபா
எம்.பி வாய்ப்பை ஏற்க மாயாவதி மறுத்துவிட்டார். இது குறித்து அக்கட்சியின்
தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், '' தேர்தல் அறிவிப்பு வெளிவந்த உடனேயே
நான் மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு எங்களது கட்சி மூலம் ராஜ்யசபாவுக்கு
அனுப்புகிறோம் என்று தெரிவித்தேன்.
இதற்காக எங்களுக்கு நன்றி
தெரிவித்த அவர், மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை நாடாளுமன்றம் செல்ல
விரும்பிவில்லை'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment