Latest News

  

1990 முதல் 2018 வரை : காவிரி பிரச்னையின் 28 ஆண்டுகால டைம்லைன்

28 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த காவிரி வழக்குக்கு இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என்றுதான் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சொல்கிறது. ஆனால், சொன்னதை என்று கேட்டிருக்கிறது கர்நாடகா என்று விவசாயிகள் கொந்தளிப்பது எப்போதுமே வாடிக்கையாகியுள்ளது. ஜூன் 2, 1990 முதல் இன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு வரை டைம்லைன் இதோ...
1990
1990 - காவிரிப் பிரச்னைக்காகத் தஞ்சை விவசாயிகள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
1990, ஜூன் - 2 - மத்திய அரசு காவிரி தீர்ப்பாயம் அமைத்தல்.

1991, ஜூன் - 25 - காவிரி தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பை வழங்குகிறது. இதனால் கர்நாடகத்தில் வன்முறை நடைபெறுகிறது. 2 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றம் அவசரச் சட்டத்தை ரத்து செய்கிறது.
1991, டிசம்பர் - 11: இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது.
1993, ஜூலை : அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகே உண்ணாவிரதம்.
1995 - தமிழகம் உச்ச நீதிமன்றம் சென்றது. தமிழகத்துக்கு 11 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவு. கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
1998 - ஆகஸ்ட் : அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது.
2000
2002, செப்டம்பர் - 8 : அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் கூடுகிறது. 9,000 கன அடி நீர் வழங்க உத்தரவு.
2002, செப்டம்பர் - 15 : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரிப் பிரச்னையில் 9 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
2002, செப்டம்பர் - 18 : தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை எதிர்த்து, கபினி அணையில் குதித்து கர்நாடக விவசாயி தற்கொலை.
2002, செப்டம்பர் - 25 : காவிரி கண்காணிப்புக் குழு கர்நாடகா வருகை.
2007, பிப்ரவரி - 5 : 1,000 பக்கம் கொண்ட தீர்ப்பைக் காவிரி நடுவர் மன்றம் வழங்குகிறது. அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் தண்ணீர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
2007, பிப்ரவரி - 12 : தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் மாநிலக் கடையடைப்பு.
2007, மார்ச் - 18 : அப்போதைய தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா, தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி உண்ணாவிரதம். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
2007 : காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு. 10 மாத தவணையில் 192 டி.எம்.சி. மட்டுமே திறந்துவிட கர்நாடகா முடிவு.

2008, ஜூன் - 30 : கர்நாடக மூத்த ஆலோசகர்கள் மாநில அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

2010, ஜூலை - 28: குடகு மாவட்டத்தில் பெய்த மழையினால் நதிநீர் அதிகரிப்பு.
2010 டிசம்பர் 2 : ஸ்டான்லி அணையின் நீர்த்தேக்கம் 120 அடியைத் தொட்டது.
2012, மே - 19 : காவிரி நதி ஆணையரைச் சந்திக்க ஜெயலலிதா முடிவு.
செப்டம்பர் - 19 : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு 9,000 கன அடி காவிரி நீரைப் பிலிகுண்டுவில் திறந்துவிட்டார்.
2013, மார்ச் - 10 : தஞ்சாவூரில் காவிரி நீர் வாரியம் அமைப்பதாக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
2013, மார்ச் - 19 : தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய நீர்வள அமைச்சகத்திடம் அனுமதி பெற தமிழகம் உச்ச நீதிமன்றம் சென்றது.
2013, மே, 10 : கர்நாடக நீரை மேற்பார்வையிடக் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கர்நாடகாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.
2013, மே - 24 : தற்காலிகக் காவிரி நீர் வழங்குதல் (2007 ஆணையை நடைமுறைப்படுத்துதல்) திட்டம்.
2013, மே - 27 : காவிரிப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று கர்நாடகச் சட்டத்துறை அமைச்சர் கூறினார்.
2013, மே - 28 : காவிரிப் பிரச்னையால் கர்நாடகாவுக்கு ரூ.2,480 கோடி நஷ்டம் என்று உச்ச நீதிமன்றத்தில் புகார்.
2013, ஜூன் - 2 : தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
2013, ஜூன் - 6 : ஜூன் முதல் செப்டம்பர் வரை 134 டி.எம்.சி தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடகா மறுப்பு.
2013, ஜூன் - 14 : காவிரி மேற்பார்வைக் குழுவில் கர்நாடகாவுக்கு எதிரான கோரிக்கையைத் தாக்கல் செய்தது தமிழ்நாடு.
2013, ஜூன் - 15 : காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகும் என்று ஜெயலலிதா கூறினார்.
2013, ஜூன் - 26 : தமிழ்நாடு காவிரி மேலாண்மை வாரியத்தின் அரசியலமைப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
2013, ஜூன் - 28 : கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
2013, ஜூலை - 15 : தமிழகத்துக்கு ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி தண்ணீர் தர உத்தரவு.
2014, ஜனவரி - 6 : காவிரி நீர் விவகாரம் தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சௌவன் நியமனம்.
2014, ஜூலை : தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு, பிப்ரவரி 5, 2007 அன்று நிறைவேற்றிய இறுதித்தீர்ப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தண்ணீர் வழங்குவதற்காக அனுமதி.
2015, மார்ச் - 30 : கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாது அணையைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு.
2016, செப்டம்பர் - 6 : தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்குக் கடிதம். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்குக் கர்நாடக அரசு 27.557 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடக் கோரிக்கை.
2016, செப்டம்பர் - 16 : தமிழக அரசு தமிழகத்தின் நீர் தேவை குறித்து கர்நாடக அரசுக்குக் கடிதம்.
2016, நவம்பர் - 18 : தமிழகத்துக்கு 45.32 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் கோரிக்கை.
2016, ஆகஸ்ட் - 16 : உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா இடைக்கால மனு.
2016, செப்டம்பர் - 5 : 10 நாள்களுக்கு ஒருமுறை விநாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறந்து விட கர்நாடகா முடிவு.
2016, செப்டம்பர் - 7 : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு.
2016, செப்டம்பர் - 12 : கர்நாடக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பால் நீரின் அளவு 15,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
2016, செப்டம்பர் - 12 : கர்நாடகம் - தமிழகம் எல்லையில் கலவரம். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி. நான்கு பேர் காயம். பெங்களூரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
2016, செப்டம்பர் - 19 : காவிரி மேற்பார்வைக் குழு வெளியிட்ட அறிவிப்பின்படி மீதமுள்ள 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
2016, டிசம்பர் 15-ம் தேதிவரை தமிழகத்துக்கு கர்நாடகா 2,000 அடி நீர் திறக்க வேண்டும்.
2017, ஜூலை - 14 : இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் - தமிழ்நாடு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் முறையான விசாரணை தொடக்கம்.
2017, செப்டம்பர் - 20 : உச்ச நீதிமன்றத்தில் நீர் ஒதுக்கீடு தொடர்பான வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
2018, ஜனவரி - 9 : காவிரி நீர் விவகாரம் மீதான தீர்ப்பை ஒரு மாதத்துக்குள் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
2018, ஜனவரி - 14 : தமிழகத்துக்குக் காவிரி நீரை விடுவிக்க முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.
2018, பிப்ரவரி - 16: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007-ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடகாவுக்கு 14.75 டி.எம்.சி அளவு கூடுதலாகத் தண்ணீர் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'காவிரி நதி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை' என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுவே, இறுதித்தீர்ப்பு. மேல்முறையீடு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.