பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போக்குவரத்துக்
கட்டண உயர்வு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு
எதிர்க்கட்சிகள் மற்றும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, அரசுக்
கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும்
மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில்
போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து, மாணவர்களுக்கும் காவல்
துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தின்போது, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்
கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "பேருந்துக் கட்டண உயர்வால்
பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை. நடுத்தர குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள், தங்களது சம்பளத்தில் பாதியைத் தினமும் 100 ரூபாய் வீதம்
பேருந்துக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், அரசு இலவசம்
கொடுப்பதற்குப் பதிலாக, வேலை கொடுத்தால் பிரச்னை இருக்காது. எங்களுக்கு
ஸ்கூட்டி வேண்டாம். வேலைதான் வேண்டும். கட்டண உயர்வால், நடுத்தர மற்றும்
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசுக் கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல்
உருவாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும் இதனால் வேலைக்குச்
செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்" என்றனர்.
இதேபோல, போக்குவரத்து
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சட்டக் கல்லூரி மாணவர்களும்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment